Friday, December 3, 2010

பிறப்பின் வருவது…

 The well-known poem about life and experience about Kannadasan.


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!



பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!



வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!



- கவிஞர் கண்ணதாசன்

Will be back soon for translation.

Tuesday, November 9, 2010

கவிதை - Poem!

ஒரு காதலன்-காதலி உரையாடல் இப்படி நிகழ்கிறது-
(This is a conversation between lovers!)

ஒரு மரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன்-
“பெண்ணே உன் வீடு எங்கே?”
“பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே.”
“நான் எப்போ வரட்டும்.”
“இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த
பிறகு வந்து சேர்."

ஒரு காதலன் காதலியைத் தனிமையில் சந்திக்க அலாவுகிறான். அவன் எப்படி இருக்கிறானாம். ஒரு மரத்தில் செய்த பாதக் குறடில் ஏறி நிற்கிறான். தோல் செருப்பு மாதிரி கால் கட்டைகள் என்று சொல்லப்பட்ட குறடுகள் அந்தக் காலத்தில் இருந்தன. ஒரு மரம் பூசி என்றால் சந்தனம் பூசி இருக்கிறான் என்று பொருள்.

ஒரு மரமாகிய பனை மரத்தால் ஆனபனை ஓலை விசிறியை வீசிக்கொண்டு, ஒரு மரமாகிய கைத்தடி வைத்துக் கொண்டு இருப்பவன், உன் வீடு எங்கே என்று கேட்கிறான்.

அதற்கு அவள் "பால் விற்கும் இடையர் வீட்டுக்கும், பானை செய்யும் குயவர் வீட்டுக்கும் நடுவில் இருக்கிறது என் வீடு. ஊசி செய்யும் கொல்லர் வீட்டுக்கும், நூல் நெசவு செய்யும் நெசவாளர் வீட்டுக்கும் அருகில் என் வீடு” என்கிறாள். இப்போது அவன் நான் எப்போது வரட்டும்" என்கிறான். மிக உண்மையானதும் நேர்மையானதுமான பதிலை இப்போது அவள் சொல்கிறாள். “இந்த ராஜா- சூரியன் அஸ்தமனமாகி, அந்த ராஜாவாகிய சந்திரன் பட்டம் கட்டிக்கொண்டு வரும் இரவு வேளையில் மரக்கதவு, மரத்தால் ஆன நிலைப்படியோடு (மரத்தோடு மரம்) சேர்த்து மூடப்பட்டிருக்கும். நேரமாக வந்து சேர்" என்கிறாள் அந்தக் காதலி. கதவு மூடப்பட்டிருக்கும், தாழிடப்பட்டிருக்காது என்பது குறிப்புப் பொருள். மூடப்படுவது மக்களுக்காக. திறக்கப்படுவது உனக்காக என்பது மறைபொருள்.
-prapanchan
The man wanted to meet her lonesome. The first half describes his appearance. He wears a wooden slipper. He wears sandal - taken from a tree. He uses a palm tree leave for a fan. He has a wooden walking stick.

He asks 'where is your house?' and she says 'it is between the houses of konaar (the people who sell milk) and kuyavar (the people who make mud-pots) and near to the houses of blacksmith and the people who makes cloth.

He asks 'when can I come?' and she says 'when the sun goes and moon comes up, when the wooden door shuts against the wooden frame.'

The in-depth meaning is that -- you will come when the doors are shut (but not locked!) - doors will be shut for people but will remain open for you. Here is the transliteration of the poem.

On a tree
Applying a tree
Holding a tree
he sways a tree -
'lady, where is your house?'
'Between the milk and pots,
Near the needle and threads'.
'When shall I come?'
'When this king dies
the other king comes to thrown
when the wood hits the wood
come and join me'.

(That's in the simplest of the form I could, for the benefit of others!)